ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் , ‘ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான பணிகளுக்காக தனியார் மூலம் போர்வெல்கள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் கூடங்குளத்தில் நீர் மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வருங்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே, போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சும் தனியார் தண்ணீர் சப்ளை லாரிகளை தடைசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.