திருமங்கலத்தில் முன்விரோதக் கொலை

0
1177

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி மேலத்தெருவில் வசித்தவர் பன்னீர்செல்வம் (21) பந்தல், கொட்டகை போடும் வேலை செய்து வந்தார் . இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான பழனிமுருகனுக்கும் (20) முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் குடிபோதையில் இருந்த இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட, பழனி முருகன் பன்னீர்செல்வத்தை கத்தியால் குத்தி விட்டார்.


படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இதையடுத்து திருமங்கலம் தாலுகா போலீசார் பழனி முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here