ஊரடங்கு நடமாட்டம் டிரோன் மூலம் கண்காணிப்பு

0
439

கடந்த 10 ஆம் தேதி முதல் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சிறிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இருந்த போதும் மக்களின் வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளாததாலும் , நோய் தொற்றின் தீவிரம் அதிகரித்ததால் நேற்று 24 ஆம் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நெல்லை மாநகர் பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் . மாநகர் பகுதியில் மட்டும் 23 சோதனைச் சாவடிகளும் , மாவட்ட எல்லை பகுதியில் 7 சோதனைச் சாவடிகளும் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் .

இன்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் . மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் வண்ணார்பேட்டை , டவுண் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் , வீதிகளில் வாகனம் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் .


இதனைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஊரடங்கு விதிமுறைகளை மீறி யாரேனும் சாலைகள் , வீதிகளில் சுற்றுகிறார்களா என ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து வருகிறோம் . விதிமுறைகளை மீறி சாலைகளில் வருபவர்கள் மீது கட்டாயமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும் , நேற்று மட்டும் 48 வழக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ‘ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here