சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திராநகரில் மளிகை கடை நடத்தி வரும் கூலுச்சாமி மகன் சுந்தர்ராஜ் ( 40),
தடை செய்யப்பட்ட குட்கா போதைபொருட்களை மொத்தமாக விற்பனை செய்ய பதுக்கிவைத்திருந்தார்.
இது குறித்து இளையான்குடி காவல்துறையினருக்கு
கிடைத்த இரகசிய தகவலின் பேரில், ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் 3.25லட்சம்
மதிப்புடைய போதைப் பாக்கு, புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.பதுக்கி வைத்திருந்த சுந்தராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்