ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தையை மீட்க நடவடிக்கை

0
897

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுஜித் என்ற அந்த குழந்தை வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தபோது 30 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழாய் கிணற்றருகே ஜேசிபி மூலம் தோண்டி இடவசதி ஏற்படுத்தி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காற்று வசதி உள்ளதால் குழந்தை உயிருக்கு பாதிப்பில்லை என்கின்றனர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மணப்பாறை தீயணைப்பு நிலையத்தினர்.

குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. வட்டாட்சியர், போலீசார் இருந்து பணிகளை கவனிக்கின்றனர்.

குழாய் அருகே மண்ணை தோண்டி பள்ளம் ஏற்படுத்திய நிலையில் தற்போது ரோபோ மூலம் குழந்தையை வெளியில் தூக்க முயற்சி நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here