சம்பள பணம் கேட்டு தகராறு: பெண் போலிஸ் கணவர் கைது

0
1069



கோவை பிஆர்எஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரியா (24). இவர் கோவை ஆயுதப்படை போலீஸ் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம்.கணவர் ரவிச்சந்திரன் என்கிற சக்திவேல் உடன் வசித்து வருகிறார். ரவிச்சந்திரன் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார் .

ரவிச்சந்திரனுக்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு பிரியாவை அடித்து மிரட்டுவது வழக்கமாக இருந்து வந்தது. மேலும், சம்பளப் பணத்தை தன்னிடம் மாதம்தோறும் கொடுத்து விடுமாறு ரவிச்சந்திரன் தனது மனைவி பிரியாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சம்பள பணத்தை தராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை பிரியா பணி முடிந்து வீடு திரும்பினார். அப்போது குடிபோதையில் வந்த அவரது கணவர் ரவிச்சந்திரன் பணம் கேட்டு தகராறு செய்ததோடு அடித்து உதைத்துள்ளார் .இதில் காயமடைந்த பிரியா இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here