ரேஷன் கடை திறப்பு கொரோனாவுக்கு அழைப்பு

0
959

கடந்த இரு வாரங்களாக கொரோனா ஊரடங்கள் தளர்வுடன் அறிவித்த அரசு, பின்னர் தளர்வை நீக்கி, முழு அடங்காக்கியது. அப்படியும் கொரோனா விடை பெறாததால் மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு ஆயத்தமாக் இருநாட்கள் கடை திறக்கலாம் என முதல் நாள் பகலில் அறிவித்து, கடை திறப்பை ஒரு நாளாக்கி, கூட்டத்தை பல மடங்காக்கி விட்டனர்,

அது போதாதென்று இன்று பொது விநியோகத்த்தை தொடங்கி மக்கள் கும்பல் கும்பலாக கூட வழி செய்துவிட்டனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். டோக்கன் விநியோகிக்கும் வழி முறைப்படி, காய்கறி விநியோகிக்கும் உள்ளாட்சி அமைப்பு மற்றும் தன்னார்வலர் அணியுடன் சேர்ந்து அரிசி, சர்க்கரையை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here