அமெரிக்காவில் கொரோனாவை தடுக்க பைசர் பயான் தடுப்பு மருந்து செலுத்தப் படுகிறது. இது அங்கு நல்ல பலனைத் தருகிறது இதனையடுத்து இந்த ஆண்டு 2 பில்லியன் டோஸ் பைசர் தடுப்பு மருந்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிற்கு தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
ஆனால் இந்தியாவில் மாநில அரசு நேரடியாக இந்த தடுப்பு மருந்துகளை வாங்க முடியாது.
மத்திய அரசின் அனுமதியின் பேரில் மட்டுமே பைசர் தடுப்பு மருந்து இந்தியாவிற்கு தர முடியும் என்று அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசோ கோவாக்சின் கோவிஷீல்டை பயன்படுத்த அனுமதித்துள்ளது

உலக அளவில் பைசர் தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அதிக போட்டி நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம் இதன் வீரியம்தான். வைரஸ் தாக்கிய நோயாளிகளின் உடலில் செலுத்தப்படும் பைசர் தடுப்பு மருந்து 94{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} பலன் அளிக்கிறது. வேறு எந்த தடுப்பு மருந்தும் இந்த அளவுக்கு வீரியத்துடன் செயல் படுவதில்லை.
எனவே பைசர் தடுப்பு மருந்தை இந்தியாவிற்கு வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்













