மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் முதல் பேரனை வரை தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் முறையாக செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், நேற்று இரவோடு இரவாக ஏற்கனவே, உள்ள சாலையின் மீது அப்படியே போடப்பட்டது. இதனால், ரோடு பெயர்ந்து வாகனங்கள் கீழே விழும் அபாயம் ஏற்பட்டது.
நேற்று போட்ட ரோடு இன்று கூட தாங்காமல் பெயர்வதால், பொதுமக்கள் மிகுந்த வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, மீண்டும் மறு சாலையை போடவேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.