இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி குழப்பம் கீறலாக வெளிப்பட்டுள்ளது. புதுவையில் பாஜகவை கலந்தாலோசிக்காமல் என்.ஆர்.காங்கிரசுக்கு காந்திநகர் தொகுதியை ஒதுக்கியதால் அதிருப்தி உள்ள நிலையில், நாங்குநேரியில் புதிய கலகத்தை பாஜக ஏற்படுத்த முயல்கிறது.
இங்கு பாஜக சார்பில் போட்டியிட பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கரும் மற்றொருவரும் விண்னப்பம் பெற்றுச்சென்றுள்ளனர். நாளை காலை மனுத்தாக்கல் செய்யப்போவதாகவும் கூறியுள்ளனர். நிச்சயம் மாநில துணைத்தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ஏதோ நோக்கத்தில் கலாட்டாவை தொடங்குகிறார்கள். விடிந்தால் தெரியும் சேதி.












