பத்திரிகையாளர் அன்பழகன் மறைவு

0
558

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான வி.அன்பழகன் (61) கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகலில் சிகிச்சை பலனின்றி காலமானார் .

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நக்கீரன் , தமிழ் முரசு உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றிய வி.அன்பழகன் கடந்த ஏழு ஆண்டுகளாக மக்கள் செய்தி மையம் என்ற ஊடக நிறுவனத்தின் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பல முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்தார்.அதன் விளைவாக 23 பொய் வழக்குகள் போடப்பட்டன.குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது 119 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். இந்த 23 பொய் வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 05-07-2021 அன்று ரத்து செய்தது.

வி.அன்பழகன் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here