தூத்துக்குடி மாவட்டம் உமரிகார்டு ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சித் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கிராமம் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற ஊழியர்கள் ஈடுபட்டனர்.