டிக்கெட் பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய ரயில்நிலைய ஊழியர் கைது

0
427

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் பணியாற்றுபவர் டீக்காராம். இவர் பணியில் இருந்த பொழுது டிக்கெட் பணம் களவு போனதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்தபோது தனது மனைவியுடன் சேர்ந்து டிக்கெட் கவுன்ட்டர் ஊழியர் டீக்காராம் கொள்ளை நாடகம் ஆடியது அம்பலம் ஆனது.

கொள்ளை நாடகம் ஆடிய டீக்காராம், மனைவியை கைது செய்து ₹1.32லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிசிடிவி காட்சிகளில் டீக்காராமின் மனைவி ரயில் நிலையத்திற்குள் செல்வதை வைத்து போலீசார் இதை கண்டறிந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here