பான் பராக், குட்கா போன்றவை போதைப்பழக்கமாக மட்டுமின்றி, உயிருக்கு உலை வைக்கும் ஆரோக்கிய கேடாகவும் இருக்கின்றன. தமிழகத்தில் இவற்றுக்கு தடை இருந்துவருகிறது. ஆனாலும், கள்ளச்சந்தை விற்பனை தொடர்கிறது. கேரள லாட்டரி போல், இது பிற மாநிலங்களில் இருந்து கடத்திவந்து விற்கப்படுகிறது.
அனைத்து மாநிலங்களிலும் இது தடை செய்யப்பட்டால், அல்லது இந்திய அளவில் நிறுத்தப்பட்டால்தான் தக்க தீர்வு கிடைக்கும் என்று மருத்துவ அலோசகர்கள் கூறி வந்தனர். மேற்கு வங்காளத்தில் பான்பராக், குட்காவுக்கு அரசு தடை விதித்துள்ளது. அவற்றை தயாரிக்கவும், விற்கவும் வரும் ஓராண்டுக்கு தடை இருக்கும். இன்று முதல் இந்த தடை அமலுக்கு வரும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தம்ழிநாட்டில் குட்காவுக்கு தடை விதித்திருந்த நிலையில், ஊழல் காரணமாக தங்குதடையின்றி ஒரு காலத்தில் விற்கப்பட்டது. அதுபோலன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மாநில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.