பெண் மீது ஆசிட் வீச்சு – கள்ளக் காதலரின் மாமனார் கைது

0
921



தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரின் மனைவி ராதா (32). இவர் கணவர் மற்றும் குடும்பத்தைப் பிரிந்து கோவை அம்மன் குளம் பகுதியில் வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார் .மேலும் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த6 ஆம் தேதி இரவு ராதா மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசி தப்பிச்சென்றார்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

நடத்தியதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் இளங்கோவன் (59) என்பவர் சிக்கினார். இளங்கோவனின் மருமகன் சந்திரசேகரும் ஆசிட் வீச்சால் காயம்பட்ட ராதாவின் கணவர் ஸ்டாலினும் நண்பர்கள். ஸ்டாலினுக்கும் அவரது மனைவி ராதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வந்துள்ளனர். இந்த சூழலில் சந்திரசேகருக்கும் ஸ்டாலினின் மனைவி ராதாவுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது மகள் குடும்பத்திற்கு பணம் தராமல் ராதா குடும்பத்திற்கு மருமகன் சந்திரசேகர் பணம் செலவு செய்ததாக இளங்கோவன் நினைத்தார்.

எனவே, தனது மகளின் வாழ்க்கை ராதாவால் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்து ராதா முகத்தில் ஆசிட் வீசி உள்ளார் .இதை அடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here