கொரோனா சாவு கொடூரம்: மின்மயானத்துக்கு முன்பதிவு

0
1175

தமிழ்நாடு முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவம் தலைவிரித்தாடுகிறது. நேற்று ஒரே நாளில் 288 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதில் தலைநகர் சென்னையில் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது. அங்கு தினமும் 70, 80 பேர் இறப்பதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் இறப்பவர்களை உறவினர்கள் எடுத்துச்சென்று இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்ய வாய்ப்பில்லாததால் மாநகராட்சி ஊழியர்களே தகனம் செய்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்படி தகனம் செய்ய எடுத்துச்சென்றாலும் திருவெற்றியூர், மூலக்கொத்தளம், பெசண்ட்நகர் உள்ளிட்ட மின்மயானங்களில் தினமும் 15 முதல் 25 வரை உடல்கள் தகனம் செய்ய வேண்டியிருப்பதால், உடல் தகன முன்னுரிமைக்காக ஒரு இணைய தளம் தொடங்கி, அதில் செய்யும் பதிவுப்படி உரிய நேரத்தில் தகனம் செய்ய அரசு ஏற்பாடு செய்யவுள்ளது.

ஓரிரு நாட்களில் தகன இணையதளம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here