அதிமுக ஆட்சிக் காலத்தில் சத்துணவு போடும் பணியை இஸ்கான் என்ற வட நாட்டு இந்து அமைப்பு மூலம் நடத்த ஏற்பாடானது. மாநிலத்தில் உள்ள சத்துணவு கூடங்கள், சமையல் உபகரணங்களோடு மானியமும் அளித்து அவர்கள் மூலம் சத்துணவை வழங்கச்செய்வதன் மூலம் அதற்கான நிதியை நன்கொடை மூலம் பெறவும் ,அரசு இந்த பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளவும் போட்ட திட்டம் அது,
அப்போதே இஸ்கான் என்ற தீவிர வட பிராமணிய கிருஷ்ண பக்தி இயக்கத்தின் கையில் ஒப்படைத்தால் சத்துணவில் முட்டை உள்ளிட்ட அசைவ உணவை பரிமாற முடியாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கர்நாடகாவில் அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தை இஸ்கான் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினருக்கு கொடுத்தனர்.
அதன் விளைவாக, அங்கு முட்டை, வாழைப்பழம் போன்ற உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் கங்காவதி பள்ளி பாணவி பேசுகிறார்., ‘ இது நல்லதல்ல, எங்களுக்கு முட்டை, வாழைப்பழம் வேண்டும். எங்களுக்கு இது கிடையாது என்று சொல்ல நீங்கள் யார்? எங்கள் பணத்தில் இதை தான் உண்ண வேண்டும் என்று சொல்வதேன்? நான் மட்டும் தனி ஆள் அல்ல, இந்த தாலுகா முழுவதுமுள்ள மாணவர்களை கூட்டுவேன்’ என்று வீர முழக்கமிடுகிறாள் .











