வானதி அலுவலகம் வந்த இளைஞர் மர்ம மரணம் – நடந்தது என்ன?

0
592

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்கு இளைஞர் ஒருவர் நேற்று மாலை வந்துள்ளார். அவரை வானதி சீனிவாசனின் அலுவலகப் பொறுப்பாளர் விஜயன், அலுவலகத்தில் இருந்து வெளியே விரட்டி விட்டுள்ளார். மேலும், அலுவலகத்தில் புகுந்த மர்ம இளைஞர் போதையில் இருந்ததாகவும், அலுவலக கதவை பூட்ட முயன்றதாகவும் இரவில் காவல் நிலையத்திலும் அந்த இளைஞரை பற்றி புகார் தெரிவித்துள்ளார்.

வெளியே வந்த அந்த இளைஞர், சுமார் 4 கிலோமீட்டருக்கு அப்பால் அவிநாசி ரோட்டில் வாகனம் மோதிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

அவர் யார்,, வானதி சீனிவாசன் அலுவலகத்திற்கு எதற்காக வந்தார், வானதி சீனிவாசனின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டாரா என்பதெல்லாம் குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here