சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபையில் இருந்துசிறப்பு விமானம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சென்னையை சோ்ந்த பெண் பயணி வெளியே செல்ல முயன்றாா். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் பயணியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்ததில் 4 வளையல்கள் இருந்தன.
பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனா். அப்போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கத்தை மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனா். அதை பிரித்து பார்த்தபோது தங்கம் இருந்தது. ரூ. 13 லட்சத்தி 3 ஆயிரம் மதிப்புள்ள 307 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
தங்கத்தை மறைத்து கடத்தி வந்த பெண் பயணியைகைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.















