சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை

0
1009

 

கோவை, பெரியநாயக்கன் பாளையம், நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (32). வாடகை காா் ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியுடன் பழகிய இவா், கடந்த 2017 மே மாதம் அவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் ஆனந்தகுமாரை கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் ஆனந்தகுமாா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஜி.குலசேகரன் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ரசீதா பேகம் ஆஜரானாா்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here