நாசரேத் கூட்டுறவு வங்கியின் அருகில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று காலை 9.30 மணி அளவில் வந்தவர் தலையனை கேட்டுள்ளார். தலையணைகள் வீட்டில் இருந்ததால் அதை எடுத்துவர கடைக்காரர் சென்றுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி, கடைக்கு வந்தவர், கல்லாவில் இருந்த 10 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுவிட்டார். போலீசார் கடையில் உள்ள சிசிடிவி பதிவை கொண்டு திருடியவரை தேடி வருகின்றனர்.









