டில்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பினா் மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்ப வலியுறுத்தியும், 2020 புதிய மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று அகில இந்திய அளவில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சாா்பாக அன்றைய தினம் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோவை ரயில் நிலையங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆா்ப்பாட்டமும் நடத்த உள்ளனா்.
மேலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா், வா்த்தக நிறுவனங்கள், தொழில் துறையினா், தொழில் சங்கத்தினா், ஆட்டோ சங்கத்தினா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
இதனால், மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.