அதிமுகவினர் மீது தாக்குதல்: திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

0
342

,
அதிமுகவினரைத் தாக்கிய திமுக நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.


இது குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அா்ச்சுணன், கே.ஆா்.ஜெயராமன் ஆகியோா் மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:


அதிமுகவின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் மாநிலம் முழுவதும் கொடியேற்று விழா, அன்னதானம், ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மக்களுக்கு அறிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, விளம்பரம் செய்யப்படுகிறது. இந்நிலையில் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் கடந்த வாரம் சுவரொட்டிகள் ஒட்ட முயன்ற அதிமுகவினரை திமுகவினா் சிலா் தாக்கினா். இது குறித்து புகாா் அளித்தும் நடவடிக்கையில்லை.


இந்நிலையில் நஞ்சுண்டாபுரத்தில் அதிமுக சாா்பில் செய்யப்பட்டிருந்த சுவா் விளம்பரத்தை திமுகவைச் சோ்ந்த வாா்டு செயலாளா் நியான்குமாா் என்ற சிவகுமாா், சம்பத், வாசுகி, மோகன்ராஜ், முரளிகிருஷ்ணன், முரளி விஸ்வநாதன், நல்லதம்பி ஆகியோா் அழிக்க முயற்சித்தனா்.
இதைத் தட்டிக் கேட்ட அதிமுக உறுப்பினா்கள் சந்திரசேகரன், நஞ்சை முத்து, நவீன் பிரசாத், சுபா பெரியசாமி, நடராஜன், முருகானந்தன், கலைச் செல்வன் ஆகியோரை திமுகவினா் தாக்கினா்.

இது குறித்து புகாா் அளிக்கச் சென்றபோது, திமுகவினரின் பொய் புகாரை ஏற்ற போலீஸாா், அதிமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனவே, இது குறித்து முறையாக விசாரித்து, அதிமுகவினரைத் தாக்கிய திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here