வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் – பேசி அழைத்து பிரித்து மேய்ந்த பெண்ணின் குடும்பத்தார்

0
759



கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி விட்டது.
இந்த நிலையில் இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு விழுப்புரம் மாவட்டம் தேன் கணுவாயை சேர்ந்த மனோஜ் (23) என்ற வாலிபர் அடிக்கடி ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.


இதுகுறித்து இளம்பெண் தனது கணவரிடம் தெரிவித்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் கணவர், மனோஜிடம் தனது மனைவியை பேச வைத்து,நேரில் பார்க்க வேண்டும் கோவைக்கு வருமாறு என்று அழைத்தார்.


பழம் நழுவி பாலில் விழுகிறது என்கிற ஆசையில் மனோஜூம் விழுப்புரத்தில் இருந்து பஸ்சில் புறப்பட்டு கோவைக்கு வந்தார்.
அந்த வாலிபர் கோவை காந்திபுரம் வந்ததும், அங்கிருந்து இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டார்.
உடனே அந்த பெண், தன்னுடைய கணவருக்கு தகவல் கொடுத்தார்.

பெண்ணின் கணவர், உறவினர்கள் 2 பேருடன் மனோஜ் நின்று கொண்டு இருந்த காந்திபுரம் 2ஆவது வீதிக்கு சென்றனர்.
அங்கு காத்துநின்ற மனோஜை அவர்கள் 3 பேரும் சரமாரியாக தாக்கினர். அத்துடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.


காயம் அடைந்த மனோஜ் அருகில் உள்ள காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இளம்பெண்ணின் கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here