சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் வேலையில் தனியார் லாரிகள் ஈடுபட்டு வருகிறது.
தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் கூறுகையில், தண்ணீர் விநியோகம் செய்யும் தனியார் லாரிகளை சிறை பிடிப்பதை கண்டித்தும், லாரி உரிமையாளர்கள் மீது பொய்யாக திருட்டு வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் வரும் 21-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளார்















