நமது முதல்வரும் அமைச்சர் பெருமக்களும் திடீரென வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது எதனாலோ தெரியவில்லை. ஆனால், அங்கிருந்து வரும் தகவல்கள் எதுவும் புதுமையாகவும் இல்லை. பிரயோஜனமாகவும் இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எரிசக்தி கொள்கையில் அணு சக்தியை கடைப்பிடிக்கும் நிலையில், மரபு சாரா எரிசக்தியை பயன்படுத்தி முழு இங்கிலாந்தையும் 2050க்குள் பிரகாசிகக் செய்யும் பிரிட்டனின் மின்சார தொழிநுட்பத்தை முதல்வர் படித்தென்ன ஆகப்போகிறது? கூடுதலாக மத்திய அரசு அணு உலை ஒப்பந்தத்தில் சமீபத்தில்தன கையொப்பம் இட்டுள்ளது.
ஆபத்துஇல்லாத நீண்டகால மின்சார உற்பத்திக்கான கொள்கையை நமட்து முதல்வர் இங்கிலாந்திலிருந்து வந்ததும் பிரகடனப்படுத்துவாரா என சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.
மருத்துவத்துறையில் தனியார் துறைக்கு பெரிதும் இடம் கொடுத்துள்ல நிலையில், அரசு சார்பிலான காப்பீட்டு திட்டங்களுக்கு கூட தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சூழலில் கிங்ஸ் மருத்துவமனை கிளையை நிறுவ முதல்வர் இங்கிலாந்து போகவேண்டுமா? மருத்துவத்தால் லட்சம் கோடி ஈட்டும் அப்போல்ல்லா போன்றவை இருக்கும் மாநிலத்தில் கிளைதொடங்க கிங்ஸ்சுக்கு கசக்குமா? என்கின்றனர்.

செங்கோட்டையன் ஒருபுறம் கல்வியில் சிறந்த பின்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மொழி வரலாறு, குல வரலாறு உட்பட சுதந்திர போராட்ட வரலாறு வரை குளறுபடியாக எழுதி, கும்பிட்டு போட்டு திருத்தும் தமிழ்நாட்டில் விர்ச்சுவல் மற்ரும் மிக்ஸ்ட் ரியாலிட்டி மூலம் வரலாறு போதிக்கப்போகிறாராம்.
பின்லாந்தில் 7 வயதில்தான் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் அடியெடுத்து வைக்கும். இங்கு போல் புத்தக மூட்டை சுமை கிடையாது. 8 மணி நேரம் மூளையை கசக்கிப்பிழியும் பாடப் போதிப்பு கிடையாது. விரும்பினால் படிக்கலாம், இல்லையேல் தூங்கலாம். மேலாக, மனப்பாட கல்விக்கே இடமில்லை. அனுபவம் மற்றும் படைப்பாற்றல் மூலமே கற்றல் நிகழ்கிறது. அதனால்தான் உலகில் முதலிடத்தை பிடித்துநிற்கிறது. அந்த கல்வி முறையை இங்கு அறிமுகப்படுத்தாமல், கற்கவே போட்டித்தேர்வு என்று நீட்டால் மாணவர்களை கொல்லும் மாநிலத்தில் பயிற்றுவிக்க எதை அங்கு கற்கப்போகிறார் என்று தெரியவில்லை என்கின்றனர்.
எனவே, முதல்வர், அமைச்சர்கள் அறிவு சுற்றுலாவின் பலனை இங்கு வந்து சேர்ந்த ஒரு வாரத்துக்கு பின்பே அறிந்துகொள்ள முடியும் என்பது அவர்கள் கணிப்பு.












