கம்பியால் உடலை சுற்றி எரித்து நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் கொலை

0
201

திசையன்விளை அருகே உள்ள கரைச் சுற்றுப்புதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். இவர் கடந்த இரண்டாம் தேதி வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார்.

இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள தோட்டத்தில் கருகிய நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை கம்பியால் சுற்றி கொலை செய்து எரித்துள்ளனர். ரூரல் டிஎஸ்பி மற்றும் திசையன்விளை இன்ஸ்பெக்டர் அடங்கலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்துகின்றனர்.

ஏற்கனவே கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரண வாக்குமூலம் என புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘சமீபகாலமாக எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன’ என்று குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here