எதிர்ப்பு பிரசாரப் பயணம்… வைகோ

0
1282

ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேனி மாவட்டத்தையும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழல் மற்றும் நீர் நிலைகளை அழிக்கும் மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு எதிராக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வருகிற 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரப் பயணம் மேற்கொள்கின்றார்

நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த லெனின் ராஜப்பா, திருமுருகன் காந்தி, பொன்னையன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தர ராஜன், ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் ஆகியோரும் பங்கேற்கின்றார்கள்.

பிரசாரப் பயணத்துக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரையில் இருந்து 10 நாள் கம்பத்துக்கு நடை பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here