தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் உடன்குடி அருகே ஆதியாக்குறிச்சி கிராமத்தில் 1012 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிடப்பட்டுள்ளது.








