கடந்த 1ஆம் தேதி நெல்லை மாநகரம், மேலப்பாளையம் அம்பை சாலையில் ஆட்டோவும் ஒரு வக்கீல் காரும் மோதின. ஆத்திரமடைந்த வக்கீல் காரை நடுரோட்டில் நிறுத்தி விட்டார். போக்குவரத்து நெரிசல் ஏற்படவே சிலர் அந்த காரை ஓரமாக தள்ளி விட்டுள்ளனர். வக்கீலிடமும் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதையடுத்து தன்னை சிலர் அவதூறாக பேசி விட்டதாக வக்கீல் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். வக்கீல் சங்க பொறுப்பாளர்கள் சிலருடன் சென்று மாநகர காவல் ஆணையரிடமும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இன்று இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக காரை ஓரமாக தள்ளி நிறுத்தியதற்கு தண்டிப்பது தவறு என்று அனைத்து கட்சியினரும் ஒன்று திரண்டு மேலப்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.