கோவை வடவள்ளி பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த சங்கானந்த் (59) தனது மனைவி விஜயலட்சுமி(54)யுடன் நேற்று மாலை வடவள்ளி பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஜோதிடர் ஒருவரை பார்க்க சென்றார். அவரது வீட்டு வாசலில் காத்திருந்த அந்த சமயத்தில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுகுறித்து வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் சங்கானந்த் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












