தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் பகுதியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவர் சுமதி, சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இதில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் முதலூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர்கள் உட்பட மொத்தம் 14 மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இசிஜி பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, பல், கண் மருத்துவ சிகிச்சை ,பொது மருத்துவம், ரத்த சோகை, நீரிழிவு நோய், இரைப்பை மற்றும் குடல் நோய், பால்வினை நோய், இதயம், தோல் ,காது மூக்கு தொண்டை ,மகளிர் நலம், மகப்பேறு குழந்தைகள் நலம், மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மருந்துகளும், மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க ப்பட்டது.
ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு, கொழுப்பின் அளவு, சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, சிறு நீரில் உப்பு சர்க்கரை அளவு, மலேரியா ரத்த தடவல் போன்றவை பரிசோதிக்கப்பட்டது.கண்புரை கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டதுடன் பரிசோதனையும் செய்யப்பட்டது.








