தூத்துக்குடி பகுதியில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள உப்பள தரிசு நிலத்துக்கு சட்ட முரணாக பட்டா மாற்றம் செய்து பல லட்சம் ரூபாய் ஆதாயம் தேடியதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பெயரும் அடிபடுகிறது.
முள்ளக்காடு பகுதி 1ல் ரத்தினமணியம்மாள் உட்பட 5 பேருக்கு பாத்தியமான 1.98.5 ஹெக்டேர் புன்செய் நிலத்தை , முன் அனுமதி, தடையின்மை சான்றிதழ் பெறாமல், விற்பனைக்கு வாய்ப்பாக, தூத்துக்குடி தாசில்தார் மற்றும் அளவையர்கள் உட்பிரிவும் செய்து, வீட்டுமனை பிரிவாக, தனிப்பட்டா வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விசாரித்தபோது, அமைச்சர் கடம்பூர் ராஜு உத்தரவில் அவ்வாறு செய்ததாக வட்ட தலைமை நில அளவையர் சிவக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் பகுதி கப்பிக்குளத்தை சேர்ந்த பாபு கலெக்டரிடம் புகார் செய்து விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.













