கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், ஒன்றியம், லீபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள விஜயநாரயணபுரம் கிராம பகுதிக்குட்பட்ட நாச்சிமார் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்ப்பாசனம் பெறும் வயல்வெளியிலுள்ள பயிர்கள் அழிக்கப்பட்டு,அனுமதி பெறாத குடியிருப்பு பகுதியாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்த விவசாய அழிப்பு கொடுமையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுக்க வேண்டும். விளைநிலங்களை அழிக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி தலைவர் பாக்கிய மணி அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியாரிடம் புகார் மனு அளித்தார்.
அவருடன் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயலாளர் ரூபன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்