தூத்துக்குடியில் உள்ள புதிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்துக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. பெயர் குறிப்பிட்டு தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு விளம்பரம் செய்ததால் ஏராளமான மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் அந்த நிறுவனம் அமைந்துள்ள இடத்திற்கு சென்றனர். அப்போதுதான் அந்த விளம்பர தகவல் போலியானது என்ற உண்மை தெரிய வந்தது.
தற்போது வேலைவாய்ப்பு எதுவும் இல்லை என்று அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் கூறி வேலை தேடி ஆவணங்களுடன் சென்ற இளைஞர்களை அனுப்பி வைத்தனர்.
:-









