நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கே டி சி நகரில் த வெ க கூட்டம் நடந்தது அதில் விஜய் பேசியதாவது :
திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க? உங்கள் மகன் உங்கள் தம்பி, உங்கள் அண்ணன்,உங்கள் விஜய் உங்களை தேடி வந்திருக்கிறேன்.இந்நேரம் திமுக கையில் முழு பவர் இருந்திருந்தால் ஸ்டாலின் சார் கையில் முழு பவர் இருந்திருந்தால் இங்கே வரவிடாமல் தடுத்து இருப்பார். இந்தப் பீரியடை ஒரு கேர் டேக்கர் கவர்மெண்ட் என்று சொல்வார்கள்.அப்படி இருந்ததனால் ஈசியாக வர முடிந்தது என்று நினைக்கிறேன். திமுக கவர்மெண்டால் நமக்கு எவ்வளவு பிரச்சனைகள் எவ்வளவு நெருக்கடிகள் எவ்வளவு அவமதிப்புகள், அவங்களையும் தாண்டி இன்னும் சில பேரு எல்லாமே பரப்புனாங்க ( பேப்பரை பார்க்கிறார் )
இந்த திமுக கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும்… இரண்டு பேருமே வெளிய வேணா தனித்தனியா இருப்பாங்க, ஆனா ரெண்டு பேருமே ஒன்றுதான். இந்த ரெண்டு பேருக்குமே ஒரே நோக்கம்தான். உங்களுக்காக நல்லது செய்ய, உங்களுக்காக உழைக்க, உங்களுக்கு கூடவே நிற்க உங்கள் விஜய் வந்து விடக்கூடாது…அதுதான்.
இந்த விஜய் வந்ததுல இருந்து அவங்க செஞ்ச ஊழலை எல்லாம் லிஸ்ட் போட்டு சொல்லிக்கிட்டு இருந்தேன் இல்லையா? அதனால செம கோவம்.
அது மட்டும் இல்லாம அடுத்து ஆட்சிக்கு வர முடியாத சூழ்நிலையை ஆல்ரெடி மக்களே நீங்களே உருவாக்கிட்டீங்க.எந்த கணக்கும் எடுபடல. எல்லாத்தையும் மண்ணுக்குள்ள புதைச்சிட்டீங்க.அப்புறம் கொள்ளையடிச்சு வச்சிருக்க பணத்தை வைத்து ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என்று ஒன்று சேர்த்து வைத்திருந்தார்கள். இப்போது அதெல்லாம் கலகலத்துப் போய் நிக்குது. டாப்பு தனியா, பாட்டம் தனியா கலகலத்து நிக்குது.
கூட்டணி கட்சிக்காரர்களே ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு போட மாட்டாங்க போல இருக்கு.. அப்படி இருக்கு நிலைமை. சரி இவங்களுக்கு தான் இந்த நிலைமை என்று பார்த்தால், பாஜக கூட்டணி நிலைமை இன்னும் மோசமா இருக்கு.
அதனால… மக்களே, இந்த திமுகவோட நேரடி கூட்டணிக்கும் மறைமுக கூட்டணிக்கும் நம்ம மேல காண்டு (ஸ்டேண்டில் இருந்து பேப்பரை எடுத்து படிக்கிறார்) ( தளபதி, தளபதி என்ற கோஷம்).
அந்த காண்டுக்கு ஒரு காரணம் என்ன தெரியுமா? உங்க கூட்டத்திலேயே,அவங்க குடும்பத்திலேயே, விசில் சத்தம் பலமாக கேட்குது அடுத்த காண்டு சில பல கோடிகளை கொடுத்து நம்ம தமிழ்நாட்டு காங்கிரசை பையில போட்டுக்கிட்டாங்க. யாரு ஸ்டாலின் சார்… ஆனா உண்மையான காங்கிரஸ் யாரு பக்கம் நிக்குது? நம்ம பக்கம் நிக்குது..
சிறுபான்மை மக்களோட அந்த திமுக சாயம் வெளுத்து போச்சு. சிறுபான்மை மக்கள் விஜய் பக்கம் தானே நிக்கிறாங்க என்று திமுகவுக்கும் பாஜகவுக்கும் என் மேல காண்டு… அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? 33 வருஷமா ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் ஒவ்வொரு மனசுக்குள்ளேயும் போறதுக்கு நான் பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரியும்.அதனால தான் நான் முன்னாடியே சொன்ன மாதிரி, கட்சி ஆரம்பிச்ச பிறகு ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் போகல…ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் நான் போன பிறகு தான் கட்சி ஆரம்பிச்சிருக்கு.
இது அரசியல் அனைத்தையும் தாண்டி இருக்கும் உறவு. இது ஒரு பூர்வ ஜென்ம பந்தம். இது அரசியல் ஆதாயம் தேடுறவங்களுக்கு என்னன்னு புரியாது. இது மத்தவங்களுக்கு தானே எலக்சன் விஜய்க்கும் விஜய் கூட இருக்கிறவங்களுக்கு எமோஷன். நான் சந்தோஷப்பட்டா மக்கள் சந்தோஷப்படுறாங்க. மக்கள் சந்தோஷப்பட்டா நான் சந்தோஷப்படுகிறேன்.எனக்கு ஒன்னுன்னா மக்களுக்கும், மக்களுக்கு ஒன்னுன்னா எனக்கும் வலிக்கும்.
எவ்வளவு அவதூறுகள்…கரூர் விஷயம் வந்தது.அதை பற்றி எல்லாருக்கும் தெரியும் போடு விஜய் மீது பழியை போடு…என்னடா இவ்வளவு பெரிய பழியை தூக்கி விஜய் மேல போட்டாலும் மக்கள் விஜய் கூட இருக்கிறாங்க. இது என்ன அதிசயமா இருக்கு? வதந்தி பேசிப் பார்த்தாங்க. மக்களிடம் எடுபடலை..
அடுத்து என்ன செய்யலாம்? ஜனநாயகனு முடக்கு… படத்தை முடக்க நான் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிருவேன் னு..படத்தை யார் முடக்குனாங்கன்னு உங்களுக்கே தெரியும், அத நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.படத்த மடக்கினாலும் அதை கண்டுக்கிடாம அவன் பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கான்.போடு எஸ் ஓ பி னு ஒன்னு போடு… விஜய்க்கு மட்டும் தனியா கண்டிஷன் அவன் வெளிய வரக்கூடாது, மக்களை சந்திக்கவே கூடாது..என்ன ஆச்சு?அதுவும் எடுபடல.
அடுத்து வேற என்னப்பா பண்ணலாம்? சுத்தி இருக்கறவங்கள வச்சு எலக்சனுக்கு 30 நாளைக்கு முன்னால ஒரு அவதூறு பரப்ப வேண்டியது. அதுவும் எடுபடல, அது மாதிரி எத்தனை சோதனைகள்…எத்தனை வேதனைகள் நீங்க கொடுத்தாலும், இந்த திமுகவினாலேயோ,பாஜகவினாலேயோ யாராலேயும் என்னை உங்களிடம் இருந்து பிரிக்க முடியாது.ஒவ்வொரு வீட்டில் இருக்கிற ஒவ்வொரு விஜயும் இருக்கிற வரைக்கும் என்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது
இவ்வாறு விஜய் பேசினார்.












