ராமேஸ்வரம் பகுதியிலிருந்து நேற்று 300க்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கிளம்பினர். இவர்களில் கச்சத்தீவு அருகே 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 20 மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றிவளைத்து கைது செய்தது.
அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். ஐநா கவுன்சிலில் ஈழ இனப்படுகொலைக்கான நீதி விசாரணை தொடர்பான தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வெளி நடப்பு செய்து விசுவாசம் காட்டிய ஒரே நாளில் இந்த நன்றிக்கடனை இலங்கை அரசு செலுத்தியுள்ளது.