2019ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் ஜி காலின், கிரேக் எல் செமன்சா என்ற இரு மருத்துவ அறிஞர்களுக்கும் இங்கிலாந்தை சேர்ந்த சர் பீட்டர் ரேட்கிளிஃப் என்ற மருத்துவ அறிஞருக்கும் பரிசு வழங்கப்படுகிறது. பரிசுத்தொகையான 6.52 கோடி ரூபாயை மூவரும் பகிர்ந்துகொள்வார்கள்.
செல்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் ஆக்சிஜனுக்கும் உள்ள தொடர்பை இவர்கள் ஆராய்ந்துள்ளனர். அதாவது, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்போது அதில் உள்ள புரதக்கூட்டுப்பொருளான எச்.ஐ.எஃப் அதிகரித்து எரித்ரோட்டின் சுரக்கச்செய்கிறது என்பது இவர்கள் ஆய்வு.
ரத்த சோகை, புற்றுநோய், பக்கவாதம் தொடர்பான ஆய்வுகளுக்கு இவர்கள் கண்டுபிடிப்பு உதவும் என கருதப்படுகிறது.