வி சி கே நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அழையா விருந்தாளியாக திமுக பங்கேற்க முன் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து திருமாவே பேசியுள்ளதாவது : நாங்கள் நேரடியாக திமுகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. பேசிக் கொண்டதன் அடிப்படையில் உங்கள் கருத்து தான் எங்கள் கருத்து. எனவே மாநாட்டில் கலந்து கொள்ள இரு பிரதிநிதிகளை அனுப்புகிறேன் என்று ஸ்டாலின் தான் கூறினார்.
ஆக, மது வெள்ளத்தில் மக்களை மூழ்கடித்து சாகடிக்கும் குற்ற உணர்வின் காரணமாகவோ, கூட்டணி கட்சியே குறை கூறத் தொடங்கிவிட்டால் கட்சிக்கு மேலும் கெட்ட பெயர் ஏற்படும் என்ற எண்ணத்தினாலோ, மாநாட்டில் பங்கேற்க தாமாகவே முன் வந்துள்ளார்.
மது விற்பனையை ஊக்குவிக்கும் தங்கள் கட்சியினர் கலந்து கொள்வதன் மூலம் திருமாவுக்கு பின்னடைவு ஏற்படட்டும் என்று கூட அவர் கருதி இருக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து உரைத்துள்ளனர்.