உலகம் முழுவது வலை விரித்துள்ள கொரோனா இந்தியாவை இறுக பற்றிக்கொண்டிருக்கிறது. வெண்ணெய்யை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக, கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகள் ஏராளத்தை கையில் வைத்துக்கொண்டு, அலோபதி மருந்துக்கு இந்தியா அலைந்தது.
கபசுர குடிநீர் கொரோனாவை தடுக்கும், குறைக்கும் என நிரூபணம் ஆகியும், ஆய்வு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அதை பரிந்துரைக்க மத்திய அரசு தயங்குகிறது.
ஆனால், டெம்விசிவீர் மருந்தை வாங்கி பயன்படுத்தி பார்த்தது. அது பலனளிக்காது என்பதோடு பக்க விளைவையும் ஏற்படுத்தும் என்று ஐநா சுகாதார அமைப்பு எச்சரித்த பின்பே கைவிட்டுள்ளது.
இப்படி நோயாளிகள் உயிரோடு விளையாடும் சோதனை விளையாட்டை தொடங்கிய அரசு, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இன்று வரும், நாளை வரும் என்றும் தவறான தகவல்களை அளித்து வருகிறது.
எதிர்பாராத கொள்ளை நோயான கொரோனாவை தடுக்க அரசே முழுமையாக முயற்சிக்க வேண்டிய நிலையில், தடுப்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஆயிரம் ரூபாயாவது விலை வைக்கப்படும் என்ற உத்தேசத்தையும் தெரிவித்தது.
இப்போது பீகாரில் தேர்தல் திருவிழா நடக்கும் நிலையில், ‘ வெற்றி பெற்றால் கொரோனா தடுப்பு ஊசி பீகார் மக்களுக்கு இலவசமாக போடப்படும்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொள்ளை நோய்ச் சட்டப்படி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடவேண்டும். அதை விடுத்து, இந்திய ஒன்றியம் முழுமையும் ஆளும் ஒரு கட்சி, இப்படி தனி ஒரு மாநிலத்துக்கு மட்டும் சலுகை அறிவித்துள்ளது தேர்தல் கால மலிவான யுத்தி என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ‘ கொரோனா தடுப்பூசி எப்போது வரும்? இது பொய்யான வாக்குறுதிகளில் ஒன்று’ என்று சொடுக்கியில் பதிவிட்டார். போலியோ சொட்டு மருந்து செலவுக்கு கூட தடுமாறுவதாக கூறப்படும் நிலையில் கொரானா தடுப்பூசியை இலவசமாக போடுவது முடியாது என்று பலரும் கூறுகின்றனர்.
இதற்கிடையே, ‘ கொரோனா தடுப்பூசி வந்தால் அனைவருக்கும் இலவசமாக போடப்படும்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஅறிவித்துள்ளார்.
எப்படியும் தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் கொரோனா தடுப்பூசி வரப்போவதில்லை என்றாலும், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வரவேற்புக்குரியதாகிவிட்டது.
இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் சித்த மருத்துவத்தை அங்கீகரித்து கொரோனாவை விரட்ட முடிவு செய்வதுதான் இப்போதைக்கு ஒரே தீர்வு . மற்றபடி எந்த அறிவிப்பும் தேர்தல் சித்து விளையாட்டாக, மலிவான விளம்பர யுத்தியாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.















