ரஜினியிடம் அரசுக்கு எதிரான கருத்து வராது…திருமாவளவன்

0
1322

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற புத்தகம் இன்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் ரஜினி பேசியபோது, அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன், அர்ஜூனனை போன்றவர்கள். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துகள். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்றார்.

இதுகுறித்து திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் எம்பியுமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மோடி- அமித்ஷாவை கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உவமையாக ரஜினி கூறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ரஜினியிடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை எதிர்பார்க்க முடியாது. என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here