திருவிழாவில் இம்ரான்கான் உருவபொம்மை எரிப்பு

0
1451

மகராஷ்டிரா மாநிலம் ஜகநாத் புத்வாரியில் பிலி மர்பாத் கோயில் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் காளி (கருப்பு நிறம்) மற்றும் பிவ்லி (மஞ்சள் நிறம்) என இரு உருவ பொம்மைகள் உருவாக்கப்படும்.
இந்த பொம்மைகள் பொதுமக்களால் தனித்தனியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் நேரு புட்லா சதுக்கத்தில் ஒன்றாக சந்திக்க வைக்கப்படும். அவற்றின் மீது மக்கள் பூவிதழ்களை தூவுவார்கள். அதன்பின்பு அவை தீ வைத்து எரிக்கப்படும். இதனால் தீய சக்திகள் ஒழிந்துவிடும். வியாதிகள் விலகும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் அவர்களை எதிர்த்த போன்ஸ்லா ராணி பங்காபாய் பின்னர் பிரிட்டிஷாரிடம் சரண் அடைந்து விட்டார். ஆதன் அடையாளமாக பிவ்லி பொம்மை ஆங்கிலேயரையும் காளி பொம்மை ராணியையும் குறிக்கிறது என்பார்கள்.
நேற்று நடந்த இந்த கோயில் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உருவப்பொம்மையை ஊர்வலமாக எடுத்துவந்து எரித்தனர். அண்டை நாட்டு பிரதமர் உருவ பொம்மையை சமய திருவிழாவில் எரித்தது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here