தமிழ்நாடு போக்குவரத்துக் கழக கோவை மண்டல மேலாண் இயக்குநா் வெளியிட்ட செய்தி:
பொங்கலை முன்னிட்டு காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு இன்று முதல் வெள்ளிக்கிழமை ஜனவரி 14 அதிகாலை வரை கொடிசியா திடலிலிருந்து தற்காலிகமாக சேலம், திருச்சி மாா்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பியக்கப் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி கோவை புறநகா்ப் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூா், அவிநாசி, பல்லடம், கரூா், சத்தி, சென்னை செல்லும் பேருந்துகளும், சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் மற்றும் தொலைதூரப் பேருந்துகளும்,
கொடிசியா திடலில் இருந்து சேலம், திருச்சி மற்றும் தொலைதூரம் செல்லும் பேருந்துகளும், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மற்றும் தொலைதூரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.
காந்திபுரம் பேருந்து நிலையம்-கொடிசியா திடல், சிங்காநல்லூா் பேருந்து நிலையம்-கொடிசியா திடல், உக்கடம் பேருந்து நிலையம்-கொடிசியா திடல் என போதுமான அளவில் இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.












