சிலிண்டருக்கு டிப்சா? நடவடிக்கை எடுத்து ‘நெட்’டில் ஏற்றணும்

0
729

சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ‘சிலிண்டர் விநியோகிக்கும் ஆட்கள் பில் தொகைக்கு அதிகமாக வசூலிக்கிறார்கள்.தரைத்தளத்துக்கு கொண்டுவர 50 ரூபாயும், முதல் தளத்துக்கு 100 முதல் 150 ரூபாயும் அதிகம் கேட்கின்றனர். இதுகுறித்து கேட்டால் சிலிண்டரை வாசலில் வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். முகவர்கள் இதை கண்டுகொள்வதில்லை. இதுபோன்ற புகார் மீது எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் சத்ய நாராயணா, சேசஷாயி ஆகியோர், ‘ சிலிண்டர் விநியோகிக்க டிப்ஸ் வாங்குவதை தடுகக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’ என்று கேட்டதோடு, ‘அந்தந்த ஊழியர் மீது எடுத்த நடவடிகையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தால் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும்’ என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அளிக்குமாறு கூறி, நவம்பர் 1ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here