கயத்தாறு தாலுகா திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த கங்கணங்கிணறு ஊரைச் சேர்ந்த விவசாயி முனியசாமி, மகன் வினோத் குமார் (22,) இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு டூவீலர் மெக்கானிக் கடையில் தினக்கூலியாக வேலைசெய்து வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணனுக்கு ஊருக்கு வடக்கே தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்தில் கிருஷ்ணன் பூச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளார். அவரது மோட்டார் பம்பு செட்டுக்கு மின்கம்பத்தில் இருந்து வரும் மின் வயர் அறுந்து விழுந்தால் கடந்த. பத்து நாட்களாக மின்சாரம் இல்லை. மின்வாரிய அலுவலரிம் முறையீட்டும் பலன் இல்லை.
அதனால் கிருஷ்ணனுக்கு உதவியாக வினோத்குமாரே மின் கம்பத்தில் ஏறி மின் தடையை சரி செய்ய முயன்றார்.டிரான்ஸ் பார்மரை சரியாக ஆஃப் செய்யாமல் விட்டதால் மின் கம்பத்தில் ஏறி பழுதுபார்க்க முயன்ற வினோத்குமார் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
கயத்தாறு போலீசார் வினோத்குமார் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வினோத்குமார் தாயார் கூறுகையில், ‘ இந்த பகுதியில் மின்வாரிய ஊழியர் (ஹெல்ப்பர் ) வராமல் அரைகுறை வேலை தெரிந்த பையன்களை வைத்து மின்சாரம் பழுதுபார்ப்பது வழக்கமாக உள்ளது. அதனால்தான் என் மகன் உயிர் போயி விட்டது.ஆகவே என் மகனைப் போல் யாரும் மின் ஊழியர் பேச்சைக் கேட்டு மின்சார வேலை செய்யவேண்டாம். மின்வாரிய அலுவலரே எனது மகன் உயிருக்கு எமனாகிவிட்டார்’ என்றார்.
அவர் கூறியது போல், மின் ஊழியர்கள் கிராமத்து இளைஞர்களை மின் கம்பங்களில் ஏற்றி வேலை செய்யச் சொல்வது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. அவ்வாறான சம்பவம் நிகழ்ந்திருந்தால், மின்வாரியம் இது குறித்து விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து போன இளைஞர் குடும்பத்திற்கு நட்ட ஈடு வாங்கி வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.