திருச்செந்தூர் தாலுகா காவல்நிலையத்தின் முன்னாள் தனிப்பிரிவு காவலர் செல்வமுருகனின் மனைவி அருணா (38) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உடன்குடி – பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியிலுள்ள வீட்டில் இன்று மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இவருக்கு இரு மகன்கள் உள்ளன. ஒருவர் கல்லூரியில் படித்துவருகிறார். ஒருவர் 10ஆம் வகுப்பு படிக்கிறார்.

கொலை தொடர்பாக செல்வமுருகனின் அக்காள் மகனை போலீசார் தேடுகின்றனர்.
கடந்த ஆண்டு இதே நாளில் தனிப்பிரிவு காவலர் செல்வமுருகன் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு மனைவி தான் காரணம் என்று கோபத்தில் செல்வ முருகனின் அக்காள் மகன், செல்வமுருகன் தற்கொலை செய்து கொண்ட அதே நாளில் ஓராண்டுக்குப் பிறகு வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது.










