திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானை சேர்ந்த உய்காட்டான் மகன் துரை(24) மற்றும் அவரது நண்பர்கள் ஆயிரம் என்ற ஆனந்த்(25), கோடீஸ்வரன்(20) வடிவேல்(20) ஆகிய 4 பேர் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவரை கருங்குளம் பெருமாள் கோவில் தெருவில் கடந்த மாதம் 27ஆம்தேதி அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். வழக்கின் முக்கிய எதிரியான துரையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.











