உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனே….

0
531

மதுரையில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மதுரை, நெல்லை, குமரி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:-நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் நிர்வாகிகள் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடைபெற்றது.

தேர்தல் குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும். அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி கட்சிகளோடு இணைந்து 100 சதவீத வெற்றியை பெற போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here