தகராறு செய்த கணவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி,போலீசுக்கு சொல்லி விட்டு தப்பியோட்டம்

0
624

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி தெற்குவளவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட் ஆக உள்ளார். தனது மனைவி ஷீலா, மகள் விஜயதர்ஷினி, மகன் விஜயராமன் ஆகியோருடன் மேலூர் அருகே எம்.மலம்பட்டியில் தனியாக சொந்த வீட்டில் குடியிருந்து வருகின்றார்.

இந்நிலையில் மணிகண்டன் அடிக்கடி குடிபோதையில் வந்து மனைவி ஷீலாவுடன் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இன்று, இறைச்சி வாங்கி மனைவி ஷீலாவிடம் கொடுத்து சமைக்க சொல்லியுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த மணிகண்டன், ஷீலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார்,

இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஷீலா வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து மணிகண்டன் தலையில் போட்டுள்ளார், இதில் தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தலை முற்றிலும் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சீலா வீட்டைப் பூட்டிவிட்டு இதுகுறித்து மேலூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

மணிகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here