நெல்லையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதி அரசு விரைவு பஸ்கள்

0
707

தமிழக ஆம்னி பஸ்கள் இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் (சிலிப்பர்) இயக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி அரசு விரைவு பஸ்களையும் படுக்கை வசதியுடன் கூடியதாக இயக்க வேண்டும் என்று பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையொட்டி தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்கள் தயார் செய்யப்பட்டன. இதில் நெல்லை மாவட்டத்துக்கு 4 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இது தவிர நெல்லை கோட்டத்துக்கு 7 புதிய நவீன பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த பஸ்களின் போக்குவரத்து தொடக்க விழாவிற்கு அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜலட்சுமி கூறுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.154 கோடி செலவில் 500 புதிய பஸ்களை மாநிலம் முழுவதும் வழங்கி உள்ளார். இதில் நெல்லை மாவட்ட மக்கள் பயன்படும் வகையில் 11 பஸ்கள் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதியுடன் கூடிய 4 பஸ்களில், 2 பஸ்கள் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.

இதில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படுக்கை வசதி ஒரு நபருக்கு ரூ.1,350, மற்ற நாட்களில் ரூ.1,250 கட்டணம் ஆகும். இருக்கை ஒரு சீட்டுக்கு ரூ.850 அனைத்து நாட்களிலும் கட்டணம் ஆகும்.

படுக்கை வசதி கொண்ட குளிர் சாதன வசதியற்ற பஸ்கள் நெல்லையில் இருந்து சென்னை திருவான்மியூருக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் படுக்கை வசதி ஒரு நபருக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.985, மற்ற நாட்களில் ரூ.860, இருக்கை வசதிக்கு ரூ.640 கட்டணம் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here